EditRegi on1
இல்லம் | கருத்தரங்கு | இணைப்பகள் | விருந்தினர் புத்தகத்தில் கையெழுத்து | எங்களை தொடர்புக் கொள்ள
 

சைவ இந்து மம்

 

EditRA Summary of the Beliefs and Practices Of Hundreds of Millions Worldwide
Who Follow the Saivite Hindu Religion And Worship Lord Siva as Supreme God

Ed


itRegio
நம்பிக்கைகளகள
n4
 

சைவ இந்து மதத்தின் சமயக்கோட்பாடு


1.

சிவபெருமானின பக்தர்கள் யாவரும் அவரே கடவுள் என்றும், அவர் முலவர், பரமசிவம், காலத்திற்கும் உருவத்திற்கும் இடைவெளிக்கும் அப்பாற்ப்பட்டவர என்றும் நம்புகிறார்கள். முனிவர் அமைதியாக பகறுகின்றார "இது அதுவன்று." ஆமாம். இவ்வாறு ஆராய்ந்து அறிய முடியாதவர் சிவபெருமான். ஓம்.

 

2.

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் அவரே கடவுள் என்றும், அவரது இயல்பு உள்ளார்ந்த அன்பு, பராசக்தி, அடித்தளத்தில் உள்ளது, மூலதத்துவம் அல்லது சக்தியாக எல்லாவற்றிலும் ஓடும் தூய உணர்வு , வாழ்க்கை, அறிவு மற்றும் மகிழ்ச்சி என்றும் நம்புகிறார்கள். ஓம்.

 

3.

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் அவரே கடவுள் என்றும், அவருடைய உள்ளார்ந்த இயல்பு மூல ஆத்மா என்றும் மற்றும் அவர் மேன்மையான மஹாதேவன், பரமேஸ்வரன், வேதங்கள் மற்றும் ஆகமங்களின் மூலவர் என்றும், எல்லாவற்றையும் ஆக்கல், காத்தல், அழித்தல் செய்பவர் என்றும் நம்புகிறார்கள். ஓம்.

 

4.

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் கணேச பெருமானை நம்புகிறார்கள். அவர் சிவ-சக்தியின் மகன் என்றும், எல்லா செயலையும் வழிப்பாட்டையும் செய்யும் முன் அவரை முதலில் வணங்க வேண்டும் என்றும் நம்புகிறார்கள். அவருடைய ஆட்சி இரக்கமுடையது. அவருடைய சட்டம் நியாயமானது. நியாயம் அவரது மனம். ஓம்.

 

5.

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் முருகப்பெருமானை நம்புகிறார்கள். அவர் சிவ-சக்தியின் மகன் என்றும் அவருடைய அருள் நிறைந்த வேல் அறியாமை என்ற கட்டை உருக்கும் என்றும் நம்புகிறார்கள். முனிவர் தாமரை ஆசனத்தில் அமர்ந்து முருகனை வணங்குகின்றார். இவ்வாறு கட்டுப்பட்டதால் அவருடைய மனது அமைதி அடைகின்றது. ஓம்.

 

6.

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் ஒவ்வொரு ஆத்மாவும் சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டது என்றும், அது அவரை ஒத்து இருப்பதாகவும், இந்த அடையாளம் ஆணவம், கர்மம், மாயை என்ற பிணைப்புகளை அவரது அருளால் எல்லா ஆத்மாக்களிடமிருந்து விலக்குவதையும் நம்புகிறார்கள். ஓம்.

 

7.

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் மூன்று உலகங்கள் உள்ளன என்று நம்புகிறார்கள் - ஆத்மாக்கள் பூத உடலைப்பெறும் பூலோகம், ஆத்மாக்கள் ஆவி உடலைப்பெறும் அந்தர்லோகம், மற்றும் காரண உலகமான சிவலோகம். அங்கு ஆத்மாக்கள் பேரொளியோடு திகழ்கின்றன. ஓம்.

 

8.

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் கர்ம சட்டங்களை நம்புகின்றனர். ஒவ்வொருவரும் தன் செயல் வினையின் பயனை அடைவர் என்றும் ஒவ்வொரு ஆத்மாவும் எல்லா கர்மங்களையும் தீர்மானித்து, மோட்சமும் விடுதலையும் பல பிறவிகள் மூலம் அடையும் என்றும் நம்புகிறார்கள். ஓம்.

 

9.

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் நல்ல நடத்தை, கோவில் வழிபாடு, யோகா, வாழும் சத்குரு அருள் மூலம் பரமசிவத்தை அடைவது ஆகிய யாவும் ஞானம், மெய்யறிவு பெற தேவை என்று நம்புகின்றனர். ஓம்.

 

10.

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் இயல்பான தீமை கிடையாது என்று நம்புகிறார்கள். தீமைக்கு மூலம் கிடையாது, அறியாமையைத் தவிர. சைவ இந்துக்கள் உண்மையிலேயே கருணை உள்ளவர்கள். முடிவில் நன்மை, தீமை என்பது இல்லை என்று அறிவார்கள். எல்லாம் சிவபெருமானின் விருப்பம். ஓம்.

 

11.

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் மதம்தான் மூன்று உலகங்களிலும் இணக்கமாக செயல்பட காரணம் என்றும், இந்த இணக்கத்தை கோவில் வழிப்பாடு முலமாக தோற்றுவிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எனெனில் அங்குதான் மூன்று உலகங்களில் உள்ளவர்கள் பங்கு கொள்வார்கள். ஓம்.

 

12.

சிவபெருமானின் பக்தர்கள் யாவரும் சைவ மதத்தின் மேன்மையான, தேவையான மந்திரம் ஐந்து புனித ஒலிகள் கொண்ட நமசிவாய என்று நம்புகிறார்கள். ஓம்.

 


 

சமய உணர்ச்சியின் உறுதி:

சிவபெருமான் இயற்கையான அன்புக் கொண்டவர். மெய்ப்பொருள் எல்லைக்கு அப்பாற்பட்டவர்.

அன்பே சிவமயம், சத்தியமே பரமசிவம்.

itRn5
EditRe gion10EditRe gion10
Edi


tReg
பழக்கங்கள்
ion7


 
 
EditR

பஞ்ச நி்த்திய கர்மங்கள்:
ஜந்து தொடர்ந்த கடமைகள்

இந்த மரபு முறையான மத பொறுப்புகளை ஓழுங்காகச் செய்தால், இவை ஒருவரை பெருங்கடவுளான சிவபெருமானின் புனித பாதங்களுக்கு அருகில் கொண்டுச் சென்று, நம் மதத்திற்கும் நமக்கும் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றும். அவை கீழ்கண்டவை.

1.

உபாசனம்: வீட்டு பூஜை அறையிலும் கோவிலிலும் வழிப்படுவது
அன்பான குழந்தைகள் சடங்குகள், கட்டுபாடுகள், பஜனைப்பாட்டு, யோகா மற்றும் மதக்கல்வி யாவும் தினந்தோறும் குடுsம்ப பூஜை அறையில் கற்பிக்கப் படுகின்றார்கள். அவர்கள் இல்லத்திலும் கோவிலிலும் வணங்குவதின் மூலமும், இறைவன் மீது அன்புக் கொள்வதின் மூலமும், மனதை அமைதியான தியான நிலைக்கு கொண்டு வருவதின் மூலமும் துணிவை பெறுகிறார்கள்.

 

2.

உற்சவம்: புனித நாட்கள்
அன்பான குழந்தைகள் இல்லத்திலும் கோவிலிலும் இந்து விழாக்களிலும் பங்குக் கொள்வதின் மூலம் கற்பிக்கப்படுகின்றார்கள்.

 

3.

தருமம்: ஒழுக்கமான வாழ்க்கை
அன்பான குழந்தைகள் கடமையைச் செயலாற்றி நல்ல நடத்தையோடு வாழகறபிக்கப்படுகின்றார்கள். அவர்கள் தன்னலமல்லாமல பிறரைப்பற்றி முதலில் நினைக்கவும், பெற்றோர், பெரியவர்கள், மதகுருக்கள் யாவரையும மதிக்கவும், இறைவனின் சட்டங்களை கடைப்பிடிக்கவும், முக்கியமாக உயிர் கொல்லாமை, நல்ல மனப்போக்கு, மனதாலும் உடலாலும் எந்த உயிருக்கும தீங்கு இழைக்காமல இருக்கவும் கற்கின்றார்கள. இவ்வாறு கர்மங்களுக்கு தீர்மானம அடைகின்றார்கள்

 

4.

தீர்த்த யாத்திரை: புனித பயணம்
அன்பானக் குழந்தைகள் அருகிலும் தொலைவிலும் வருடத்திற்கும் ஓரு முறையாவது குரு தரிசனத்திற்கும், கோவிலுக்கும், புனித இடங்களுக்கும் அழைத்து செல்லப்படுகின்றார்கள். அவர்கள் உலக விவகாரங்களிலிருந்து விலகி இருக்கவும், இறைவனையும் குருக்களின் வாழ்க்கையையும் ஒருமுகமாக நினைக்கவும் இந்த பயணங்கள் முலம் கற்கின்றார்கள்.

 

5. சம்ஸ்காரம்: வளர்ச்சியின் சடங்குகள்
அன்பானக் குழந்தைகள் அவர்கள் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு புனிதத்தைத்தரும் புனித சடங்குகளை கடைப்பிடிக்க கற்பிக்கப்படுகின்றார்கள். அவர்கள் பிறப்புச் சடங்குகள் மூலமும், வளர்ச்சியின் மூலமும், முதல் கல்வி மூலமும், வளர்ச்சியின் மூலமும், திருமணம் மற்றும் இறப்பு மூலமும் கற்கின்றார்கள்.



யாமங்களும் நியமங்களும்:
இந்து மதத்தின் நல்லொழுக்கச் சட்டங்கள


யாமங்களும்

1.

தீங்குச் செய்யாமை, அஹிம்சை: எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் பிறருக்கு தீங்கு இழைக்காமை

2.

உண்மை நிலை, சத்தியம்: பொய் சொல்லுதல், நம்புபவரை ஏமாற்றுதல் இவற்றிலுருந்து விலகி இருத்தல்.

3.

திருடாமை, அஸ்தேயம்: திருடாமை, பிறர் பொருளை விரும்பாமை அல்லது கடன் படாமை

4.

தெய்வீக நடத்தை, பிரம்மச்சரியும்: திருமணத்திற்குமுன் காமத்தை அடக்கி, திருமணத்திற்குபின் கற்போடு வாழ்தல்

5.

பொறுமை, க்க்ஷமா: மக்களோடு சகிப்புத்தன்மை கொள்வதும், சூழ்நிலைகளில் பொறுமை கொள்வதும் ஆகும்.

6.

உறுதியுடைமை, திரிதி: விடாமுயற்சி இல்லாமை, பயம், முடிவு செய்யாமை, மனதை மாற்றுவது யாவற்றையும் வென்று இருப்பது.

7.

கருணை, தயை: சொரணையற்று இருப்பது, கொடூரமாக இருப்பது, எல்லா உயிரினங்களையும், நல்ல எண்ணதோடு நோக்கி காத்து யாவற்றையும் வெல்வது.

8.

நேர்மை, நாணயம், அர்ஜவம்: எமாற்றுவதையும், தீமையான செயலையும் விலக்குவது.

9.

நிதான பசி, மிதிகாரம்: அதிகமாக சாப்பிடாமல் இருப்பது. மாமிசம், மீன், கோழி மற்றும் முட்டை சாப்பிடாமல் இருப்பது.

10.

தூய்மை, செளச்சா: உடலாலும், மனதாலும், சொல்லாலும் தூய்மையற்ற நிலையை விலக்குவது.



பத்து பழக்கங்கள், நியமங்கள

1.

மன உறுத்தல், ஹிரி: பணிவுடன் இருந்து செய்த தீங்குச் செயல்களுக்கு வெட்கம் கொள்வது

2.

திருப்தி, சந்தோஷம்: வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் தேடுவது

3.

கொடை, தானம்: வெகுமதி எதிர்ப்பார்க்காமல் பெருந்தன்மையுடன் கொடைக கொடுப்பதும் பதின்மைப்பொருள தருவதும்

4.

பக்தி, ஆத்திகம்: உறுதியாக இறைவனையும் கடவுள்களையும் குருவையும் நம்புவதும் மற்றும் ஒளியூட்டும் பாதையை நம்புவதும்

5.

இறை வழிப்பாடு, ஈஸ்வரப்பூஐனம்: அன்றாட வழிப்பாடு மூலமும் தியானத்தின் மூலமும் பக்தியை பேணீ வளர்ப்பது

6.

சமய நூல கேள்வி, சித்தாந்த சிரவணம்: திருமறை நூல்களின் பாடங்களை கற்பதும், தன்னுடைய பாரம்பரியத்தில உள்ள மநிநுட்பமுடைய பெரியவர்களுடைய சொல்லைக கேட்பதும்

7.

அறிவு, மதி: குருவின் வழித்துணையோடு ஆத்மீக உறுதியையும், ஆற்றலையும் பெறுவது

8.

புனித சபதம், விரதம்: மத விரதங்களையும், சட்டங்களையும், பழக்கங்களையும் நிறைவேற்றுவது

9.

ஒப்புவித்தல், ஐபம்: தினமும் மந்திரங்களை ஓதுவது

10.

எளிமை நிலை, தவம்: நோம்பும், தவமும், தியாகமும் செய்வது

 

egion8 EditRegion5
 
 
EditRe

எழுத்தாளரைப் பற்றி:

சத்குரு சிவாய சுப்ரமுனியச்சாமி (1927 - 2001)
கலிபோர்னியாவில் பிறந்து, இலங்கையின் பெரு முனிவரான யோகசாமியால் 1949ம் ஆண்டு தீட்சையளிக்கப்பட்டார். நவீன இந்து மதத்தின் மறுவளர்ச்சியின் சிற்பியாக இருந்து 2.5 கோடி சைவத் தமிழர்களுக்கு சத்குருவாக இருக்கின்றார். குருதேவர் அமெரிக்காவின் முதல் இந்துக் கோவிலை நிலை நாட்டினார், இன்றைய இந்து மதம் என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார், அமெரிக்காவின் முதலுமான ஓரே ஆதீனத்தை தொடங்கினார், மற்றும் ஹவாயி மாநிலத்திலுள்ள குவாய் என்னும் தீவில் முழுக்க கல்லால் சிவபெருமானின் கோவிலைக் கட்டினார்.அவருக்கு அடுத்த சிவ சித்தாந்த யோக மரபு கைலாச பரம்பரை குரு சத்குரு போதிநாத வேலன்சாமி. இந்த சுருக்கம் குருதேவரின் சிறந்த நூலான குருவின் பாடங்கள் மூன்றின் தொகுதி, இந்து மதத்தின் தத்துவம், கலாச்சாரம் மற்றும் நிலை கடந்த ஆராய்வு 365 பாடங்களில் தினந்தோறும் படிப்பது என்பதிலிருந்து எடுக்கப்பட்டது. www.gurudeva.org என்ற முகவரிக்கு செல்லுங்கள்.

Translated by Tirumati Vaidehi Ganesan from Tuticorin, Tamil Nadu, India, now living in Kauai, Hawaii, USA.

gion9 EditReg ion4
 
 

Copyright © Siddhanta Publications. All rights reserved.